அநேக துர்நிகழ்வுகளின் கூட்டு நனவிலி உளவியல் நுட்பமான பயத்தை விநோத வடிவில் கொண்டுள்ளது.
எல்லா நேரங்களிலும் அதிகாரத்தின் வட்டத்துக்குள் மிகவும் வசதியாகவும் அனைத்து விதங்களிலும் சிறப்பாகவே இருப்பர். இத்தகைய வாழ்வியலில் வெறுப்புணர்வின் வழி உருவான பயம், அழித்தொழிப்பை கண்மூடித்தனமாக வரவேற்கும்.
பெரும்பாலான இனப்படுகொலைகள், சாதிய வன்கொடூரங்களின் காரணங்களுள் ஒன்றாக நனவிலி மனதிலுள்ள பயம் என்ற உளவியல் உள்ளது.
காலனியா? சேரிப்பகுதியா? வேற்று மதத்தவர் வசிக்கும் பகுதியா? அரசுக் குடியிருப்பா? இவ்விடங்களின் ஒவ்வாமை உருவாக இதே அச்சவுணர்வும் ஒரு காரணம்.
காலகாலமாக பழக்கப்பட்டு உருவாக்கப்பட்டதால் ஆழ்மனதில் சேகரிக்கப்பட்டு ஒவ்வாமையாகவும் , வெறுப்புணர்வாகவும் வெளிப்படுகிறது.
அதிலிருந்தே கருத்தியலும் கட்டமைக்கப்படுகிறது.
அப்பட்டமாக வெளிப்படுவதைவிட, பதியப்பட்டு ஒளிவுத்தன்மையோடு இருப்பதாலேயே நனவிலி அச்சம் ஒரே நேரத்தில் ஆபத்தானதாகவும், சிந்தனையின்மையோடும் செயல்படக்கூடியது.
பல உதாரணங்கள் சொல்லலாம். சமீபத்திய மணிப்பூர் இனப்படுகொலைகள் நிகழ்வதில் நனவிலி அச்சம் பெரும்பங்கு வகிக்கிறது.
சட்டமுறைமையோடு கையாளப்படவேண்டிய நிலமும் அதன் உரிமையும் கலவரமாக வடிவம் பெற பாசிசம் உருவாக்கிய கூட்டு சமூக அச்சம் அசாதாரணமானது.
நீண்ட கால வரலாற்றில் அடிப்படைவாதம் உள்நுழைந்தால் இத்தகைய பேராபத்துகளே நிகழும்; என்றென்றைக்குமான உண்மை.
நனவிலி அச்சம் காரணிகளுள் ஒன்றுதான், தீவிர உரையாடலுக்குள் கொண்டுவரவேண்டியது. பார்ப்போம்....
No comments:
Post a Comment